நாக சைதன்யா அக்கினேனி இவர் ஒரு தெலுங்கு திரைப்பட நடிகர் ஆவார். மேலும் இவர் தமிழ், தெலுங்கு திரைப்பட நடிகர் அக்கினேனி நாகார்ஜுனா வின் மகன் ஆவார்.
இவர் 2009ஆம் ஆண்டு ஜோஷ் என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து 100% லவ், மனம், ஆடோநகர் சூர்யா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிக்கும் படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.'கஸ்டடி' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்ரீநிவாஸா சித்தூரி தயாரிக்கிறார்.
'உலகில் நாம் காண விரும்பும் மாற்றமாக மாறுவோம்! பிறந்தநாள் வாழ்த்துக்கள் நாக சைதன்யா..வேட்டை ஆரம்பிக்கட்டும்!' என்று இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். தமிழ் திரையில் பிரபல இயக்குநராகவும், வெற்றி இயக்குநராகவும் அறியப்படும் வெங்கட்பிரபு, தற்போது நேரடி தெலுங்கு படத்தை இயக்குகிறார்.
Listen News!