• Apr 20 2024

குங்ஃபூ தற்காப்பு கலை புருஸ்லீ இறப்பதற்கு இது தான் காரணமா?- 50 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகிய மர்ம ரகசியம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

இன்று உலகளவில் மிகவும் பிரபல்யமான கலைகளில் ஒன்றாக இருப்பது குங்ஃபூ தற்காப்பு கலை ஆகும்.இதற்கு காரணமாக இருந்தவர் தான் புருஸ்லீ. சீன வம்சாவளியைச் சேர்ந்த இவர் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள சான் ஃப்ரான்சிஸ்கோவில் பிறந்தார்.

 சிறு வயதிலே தனது குங்ஃபூ கலையில் மாற்றங்களை கொண்டு வந்த இவர் கடந்த 1971-ம் ஆண்டு வெளியான தி பிக்பாஸ் என்னும் திரைப்படம் மூலம் அறிமுகமாகினார்.பெரிய வசூல் சாதனையை படைத்த இப்படம் ஆசியாவில் மட்டும் 12 மில்லயன் டாலர்கள் வரை வசூலித்தது.


இவரது நடிப்பில் கடைசியாக எண்ட்ர் தி டிராகன் என்னும் திரைப்படம் வெளியானது.ஆனால் இப்படம் வெளியாகும் முன்பே தலைவலிக்கிறது என தூங்க சென்ற புரூஸ்-லீ பின்னர் நினைவு திரும்பாமலே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனது 32வது வயதில் இறந்தார்.

 அவரது மரணம் மர்மமாக இருந்தது வந்தது.இந்நிலையில் இவரின் மரணம் குறித்து 50 ஆண்டுக்களுக்கு பிறகு கிளினிக்கல் ஜர்னல் என புத்தகத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. அதில் புரூஸ் லீ-ன் மூளை பெரிதாகி இறந்ததாக கூறப்பட்டு இருகிறது.புரூஸ் லீ உடற்பயிற்சிகாக அதிக புரோட்டின்கள் எடுப்பார், இதனால் தாகம் காரணமாக அதிக தண்ணீரை எடுத்துள்ளார். அதிகபடியான தண்ணீரை சிறுநீராக பிரிக்கும் சக்தியை அவரின் சிறுநீரகம் பெற்றிருக்கவில்லை.


இதன் பின்விளைவாக மூளையில் நீர்விக்கம் ஏற்பட்டு எடை கூடியுள்ளது, மனிதனின் மூளை எடை சராசரியாக 1400 கிராம் இருக்கும், புரூஸ் லீயின் மூளை 1575 கிராமாக பெரிதாகிவிட்டது. இதனால் அவருக்கு திடீர் இறப்பு ஏற்பட்டுள்ளது, இது அவருடைய பிரேத பரிசோதனையில் தெரியவந்தது என அந்த புத்தக்கத்தில் கூறப்பட்டு இருக்கிறது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.  

Advertisement

Advertisement

Advertisement