பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு மாதங்களை எட்ட உள்ளது. இந்த சீசனில் ஆரம்பத்தில் 20 போட்டியாளர்கள் பங்கு பற்றினார்கள். அதற்குப் பிறகு நான்கு போட்டியாளர்கள் வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் உள்ளே சென்றனர் .
இதைத்தொடர்ந்து பிக் பாஸ் இல்லம் ஆட்டம் காண ஆரம்பித்தது. தற்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் பிக் பாஸில் கலந்து கொண்டு 21 நாளில் வெளியேறிய ஆதிரை மீண்டும் வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் மீண்டும் உள்ளே சென்றுள்ளார்.
இந்த நிலையில், பிக் பாஸ் சீசன் 9-ல் கலந்து கொண்டு எலிமினேட் ஆனபோது ஆதிரை தனியார் யூடியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டி வைரலாகி வருகிறது. அதில் நான் வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் உள்ளே செல்லும் வாய்ப்பு கிடைத்தால் இதைத்தான் பண்ணுவேன் என தெரிவித்துள்ளார்.
அதன்படி அவர் கூறுகையில், பிக் பாஸில் நான் இருந்தபோது எல்லோருடனும் சகஜமாக பேசினேன். டாஸ்க் விளையாடி இருக்கேன். ஆனால் என்னை FJ தவறாக பயன்படுத்தி விட்டான். அவரால் நான் மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளானேன்.

பிக் பாஸில் எனக்கு மீண்டும் வைல்ட் கார்ட் என்ட்ரி கிடைத்தால் அந்த சான்சை மிஸ் பண்ண மாட்டேன். எனினும் அவர் மீது உள்ள கோபத்தை நேரடியாக காட்ட மாட்டேன். எனது ஆட்டம் கேமின் மூலமே இருக்கும்.
நான் FJ யுடன் சகஜமாகத்தான் பேசினேன். ஆனால் நான் பேசியதை மட்டும் வீடியோக்களில் காட்டியுள்ளார்கள். நான் அவர் பின்பு சுற்றியது போல காட்டி இருக்கின்றார்கள். ஆனால் அவர் என்னுடன் பேசியது, அங்கு நடந்த எதையும் காட்டவில்லை.
அது மட்டும் இல்லாமல் அவர் என்னுடன் கதைத்து விட்டு, பிற போட்டியாளர்களிடம் சென்று நான் அவர் பின்பு சுற்றுவது போலவும் சித்தரித்துள்ளார். இது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை. எனவே நான் வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் உள்ளே சென்றால் எனது ஆட்டம் வேற மாதிரி இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
எனவே பிக் பாஸில் கலந்து கொண்டு எலிமினேட் ஆன ஆதிரை, மீண்டும் வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் உள்ளே சென்றுள்ளார். இன்றைய தினம் வெளியான ப்ரோமோவிலும் ஆதிரையை பார்த்த FJ யும் வியானாவும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இனி ஆதிரையின் ஆட்டம் சூடு பிடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Listen News!