• Jul 22 2026

கடைசில ஹன்சிகாவும் அத பண்ணிட்டாங்களே..! தீயாய் பரவும் வீடியோ

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான தனுஷ், ஜெயம் ரவி, விஜய், சிம்பு என அடுத்தடுத்த ஹிட் படங்களில் நடித்து வந்தவர் தான் நடிகை ஹன்சிகா.

ஆரம்பத்தில் புசுபுசுவென அமுல் பேபி போல இருந்த ஹன்சிகா, ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தார். அதன் பின்பு ஒல்லி பெல்லி ஆகி ஆளே அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார்.

இதனால் பட வாய்ப்புகள் இழந்து தற்போது ஹாரர் படங்களில் அதிக நாட்டம்  காட்டி வருகின்றார். சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை இரண்டாவது பாகத்தில் பேயாக நடித்து மிரட்டி இருந்தார்.


ஹன்சிகாவுக்கு தமிழ் சினிமா பக்கம் வாய்ப்புகள் குறைந்தாலும் தெலுங்கு, பாலிவுட் என படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது ட்ரெண்டிங்கில் காணப்படும் கண்மணி அன்போடு காதலன் என்ற பாட்டிற்கு ஹன்சிகாவும் குத்தாட்டம் போட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.




  

Advertisement

Advertisement