• Apr 28 2024

ரசிகர்கள் சோர்வடையக் கூடாது- பிரின்ஸ் படத்தின் 12 நிமிடக் காட்சிகளை நீக்கிய சிவகார்த்திகேயன்

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தாகனட பிரின்ஸ். இப்படம் 21ஆம் தேதி அதிகாலை 5 மணி முதல் திரையிடப்படவுள்ளர். நகைச்சுவை கலந்த காதல் வகையில் எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் மரியா என்பவர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இப்படத்தின் ப்ரமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில் இப்படத்தில் இருந்து 12 நிமிடக் காட்சிகளை நீக்கியதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது முதலில் இப்படத்தை  இரண்டு மணி நேரம் 23 நிமிடம் ஓடக்கூடிய வகையில் உருவாகி இருந்தனர்


அந்தப் பதிப்பை நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் பார்த்துள்ளார் அதன்பிறகு பட குழுவினரிடம் இருந்து சில காட்சிகளை நீக்க கூறியுள்ளார். இதன் காரணமாக பிரின்ஸ் படத்தில் இருந்து 12 நிமிட காட்சிகளை படக்குழுவினர் நீக்கியுள்ளனர்.எந்த இடத்திலும் ரசிகர்களுக்கு சோர்வை ஏற்படுத்த கூடாது என்ற நோக்கில் நேரத்தை மாற்றி அமைத்து இருப்பதாக கூறப்படுகிறது. 

இதன் காரணமாக பிரின்ஸ் திரைப்படத்தின் நீளம் 2 மணி நேரம் 11 நிமிடம் என மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதில் முதல் பாதி ஒரு மணி நேரம் 7 நிமிடம் 19 நொடிகள், இரண்டாம் பாதி ஒரு மணி நேரம் 3 நிமிடம் 45 நொடிகள் ஓடக்கூடிய வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது

Advertisement

Advertisement

Advertisement