• Apr 28 2024

புல்லட் வண்டியில் தி லெஜண்ட் படத்தின் புரோமோஷன் பணியில் ஈடுபட்ட ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ்த் திரையுலகில் "தி லெஜண்ட் என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகவுள்ளவர் தான்சரவணா ஸ்டோரின் உரிமையாளர் லெஜண்ட் சரவணன் ". இந்தப் படத்தில், பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌதாலா கதாநாயகியாக நடித்துள்ளார்.

இவர்களுடன் மறைந்த நடிகர் விவேக், மயில்சாமி, பிரபு, நாசர், சச்சு, ரோபோ சங்கர், யோகிபாபு, ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்தப் படத்திற்கு ஹரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

தி லெஜண்ட திரைப்படம் இரு தினங்களில் திரையரங்கில் வெளியாக உள்ள நிலையில் புரோமோஷன் பணியையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் லெஜண்ட் சரவணன். ஆந்திராவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழ், தெலுங்கு,இந்தி என அனைத்து மொழிகளிலும் பேசி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய சரவணன், வயது என்பது "ஜெஸ்ட் நம்பர் தான்" என்று கூறி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

இதையடுத்து, மலையாள தி லெஜண்ட் திரைப்படத்தின் புரோமோஷனுக்காக கேரளா சென்ற லெஜண்ட் சரவணனுக்கு ரோஜாப்பூ மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், புல்லட் வண்டியில் தி லெஜண்ட் போஸ்டர் பிரிண்ட் செய்யப்பட்ட டீ ஷர்ட்டை அணிந்து வந்த ரசிகர்களின் படை சூழ, விலை உயர்ந்த சொகுசு காரில் புரோமோஷன் நடைபெறும் இடத்திற்கு வந்தார்.

அவருக்கு வழிநெடுகிலும் கேரளாவின் பாரம்பரிய முறைப்படி செண்டை மேளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement