• May 06 2024

நான் நிர்வாணமாக நடிக்கவில்லை குட்டி டிரெஸ் போட்டிருந்தேன்- அந்தர் பல்டி அடிக்கும் இரவில் நிழல் திரைப்பட நடிகை பிரிகிடா

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழில் முன்னணி நடிகரான இயக்குநர் பார்த்திபன் இயக்கி அவரது நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் இரவின் நிழல்.இப்படத்தில் படக்குழுவின் இடைவிடாத உழைப்பு காரணமாக 22 டேக்குகளுக்கு பிறகு சிங்கிள் ஷாட் படமாக உருவானது .

இப்படம் ஒரே இடத்தில் எல்லாம் எடுக்காமல், ஒரு பெரிய இடத்தில் ஏகப்பட்ட செட்களை அமைத்து எடுக்கப்பட்டது. இப்படத்திற்கு ரஜினிகாந்த் உட்பட பிரபலங்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்திருந்தனர்.இருப்பினும் இப்படத்தில் நடித்த நடிகைகளால் பல சர்ச்சைகளிலும் சிக்கி வருகின்றது.

இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிகை பிரிகிடா நடித்திருந்தார்.'சேரி' மக்கள் அசிங்கமாத்தான் பேசுவாங்கன்னு சொல்லி சர்ச்சையில் சிக்கிய நடிகை பிரிகிடா நிர்வாணமாக நடித்ததற்கு எதிராகவும் எதிர்ப்புகள் கிளம்பின

இது குறித்து சில பேட்டிகளில் அவரிடம் கேட்கும் போது, அந்த ஒரு காட்சியில் நடிக்கத் தான் ரொம்பவே தயங்கியதாகவும், பெற்றோர்களிடம் பார்த்திபன் சார் தான் பேசி கன்வின்ஸ் செய்தார் என்றும் கூறியிருந்தார். ஆனால், தற்போது மற்றொரு பேட்டியில், நான் நிர்வாணமாகவே நடிக்கல பாஸ், அது ஒரு ட்ரிக் என பேசியிருப்பது ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.

அந்த ஷாட்டில் நடிக்க ரொம்பவே குட்டியான டிரெஸ் போட்டிருந்தேன். அது ஒரு எலாஸ்டிக் மாதிரி இருக்கும், அதை இழுத்து விட்டால், டிரெஸ் போட்டிருப்பது போல தெரியாது. ஆனால், அந்த அளவுக்கு குட்டியான உடையை அணிந்து நடிக்கவே ரொம்பவே கூச்சப்பட்டேன். ஆனால், அதை பலரும் நான் நிர்வாணமாக நடித்ததாகவே நினைத்து விட்டனர். உண்மையில், அது ஒரு சீட் ஷாட் தான் நான் நிர்வாணமாக நடிக்கவில்லை என அந்தர் பல்டி அடித்து விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement