தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகரும், பல நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் தனது தனித்துவமான டைமிங்க் மற்றும் பஞ்ச் டயலோக் என்பவற்றால் நம்மை நகைச்சுவை அடையச் செய்தவர் நடிகர் கவுண்டமணி. இன்று அவரது குடும்பத்தில் இருந்து ஒரு துயர செய்தி வெளியாகியுள்ளது.
கவுண்டமணியின் மனைவி திருமதி சாந்தி (வயது 67), உடல்நலக்குறைவால் இன்று காலமானார் என்பதை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய தகவல்களின் அடிப்படையில், சாந்தி கடந்த சில மாதங்களாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்ததாக கூறப்படுகின்றது.
தற்போது அவரது உடல், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கவுண்டமணியின் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. குடும்பத்தினர், உறவினர்கள், மற்றும் திரையுலக நண்பர்கள் அந்த இடத்திற்கு வந்து இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
Listen News!