• Apr 29 2025

5 நாட்களில் பல கோடிகளை வசூலித்த "கேங்கர்ஸ்"..!சந்தோசத்தில் துள்ளிக் குதிக்கும் ரசிகர்கள்.!

subiththira / 2 hours ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவில் நகைச்சுவை அரசராக திகழும் வடிவேலு, பல வருடங்களுக்கு பிறகு சுந்தர்.சி இயக்கத்தில் இணைந்து நடித்திருக்கும் "கேங்கர்ஸ்" திரைப்படம், ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பைப் பெற்றிருக்கிறது. ஐந்து நாட்களில் உலகளாவிய வசூல் சாதனை படைத்துள்ள இந்தப் படம், தற்போது சமூக ஊடகங்களிலும் பேசுபொருளாக மாறியுள்ளது.

வின்னர் , தலைநகரம் உள்ளிட்ட வெற்றிப் படங்களை வழங்கிய இயக்குநர் சுந்தர்.சி மற்றும் நகைச்சுவை நாயகர் வடிவேலு, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரே படத்தில் இணைந்திருக்கின்றார்கள். ரசிகர்களிடையே அவர்களது கூட்டணி மீதான எதிர்பார்ப்பு ஏற்கனவே நிலவி வந்த நிலையில், "கேங்கர்ஸ்" படம் அந்த நம்பிக்கையை மீறாமல், சாதனைகள் படைத்துள்ளது.


இந்த படத்தில் வடிவேலுவுடன் சேர்ந்து, சுந்தர்.சி, கேத்ரின் தெரசா, முனீஸ்காந்த் மற்றும் பகவதி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். திரைக்கு வந்த முதல் நாளிலிருந்தே "கேங்கர்ஸ்" வசூல் ரீதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 

அந்த வகையில் சமீபத்திய தகவலின்படி, உலகளவில் இந்தப் படம் 5 நாட்களில் ரூ.9.5 கோடி வரை வசூலித்துள்ளது. இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் தீவிரமாக வைரலாகி வருகின்றது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு வடிவேலுவின் வருகை குறித்து சினிமா வட்டாரங்களிலும், ரசிகர்களிடையிலும் பெரும் சந்தோஷம் நிலவுகின்றது.

Advertisement

Advertisement