• Mar 09 2025

ஐரோப்பாவில் 2வது ஹனிமூன் கொண்டாடிய நாகசைதன்யா! இணையத்தில் வைரலான கிளிக்ஸ்....

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

திரையுலகில் வெற்றிப் படங்களில் நடித்து வரும் நாகசைதன்யா ‘தண்டேல்’ திரைப்படம் மூலம் ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்தார். இத்திரைப்படத்தின் கதை மற்றும் அவரது நடிப்புக்கு மக்களிடையே  பாராட்டுக்கள் குவிந்தன. இந்த வெற்றியை சந்தோஷமாக கொண்டாட  நாகசைதன்யா தனது மனைவி சோபிதாவுடன் ஐரோப்பாவிற்கு சென்றுள்ளார்.

இந்த அழகான ஜோடி தற்போது பிரபலமான சுற்றுலாத்தலங்களுக்குச் சென்று மகிழ்ந்து வருகிறார்கள். குறிப்பாக சோபிதா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட புகைப்படங்கள் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சோபிதா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த புகைப்படங்களில், அவர்கள் இருவரும் மிகவும் சந்தோசமாகவும் ரொமான்டிக் தோற்றத்துடனும் இருக்கின்றனர். 


நாகசைதன்யா தற்போது சோபிதாவுடன் ஹனிமூனில் இருப்பது பலருக்கும் சந்தோசத்தை அளித்தாலும் சில ரசிகர்கள் அவரின் முதல் திருமணத்தையும் நினைவுகூர்ந்து வருகின்றனர். நாகசைதன்யா கடந்த 2017ல் பிரபல நடிகை சமந்தாவை  திருமணம் செய்து கொண்டார்.


எனினும் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்து கொண்டதுடன் சமந்தா தனது திரைப்பயணத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இதன் பிறகு நாகசைதன்யா சோபிதாவை காதலித்து  திருமணம் செய்துகொண்டார். எனினும் நாகசைதன்யாவின் ரசிகர்கள் அனைவரும் தங்களுக்கு மிகுந்த சந்தோசமாக உள்ளதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement