• May 22 2024

ஜெயிலில் இருந்து வெளியே வந்த புகழ்-ஷாக்கான ரசிகர்கள்-இது தான் காரணமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அது இது எது என்ற நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் புகழ்.

இதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகழ் அந்த நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானார். இந்த நிகழ்ச்சியின் மூலம் புகழுக்கு அனேக ரசிகர்கள் உருவாக்கினர், அது மட்டுமன்றி நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளார். இந்நிகழ்ச்சியின் மூலம் அவருக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது.

அந்தவகையில் நடிகர் அஜித்துடன் வலிமை, சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன் போன்ற திரைப்படங்களில் நடித்து அசத்தி இருந்தார்.

இந்நிலையில் புகழ் "Mr Zoo keeper”என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகின்றார்.

இந்நிலையில் புகழ் ஜெயிலில் இருந்து வரும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இவர் என்ன காரணத்திற்காக ஜெயிலுக்கு சென்று இருப்பார் என்று பலவிதமான கருத்துகளை கூறிவருகின்றனர்.

அந்த வகையில் இது என்ன காரணம் என்று பார்த்தால் அவர் நடித்திருக்கும் திரைப்படத்தில் நடந்துக்கொண்டிருக்கும் படப்பிடிப்பில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ என்று தெரிய வந்துள்ளது. இந்த வீடியோவில் ஜெயிலிலிருந்து வெளியே வருகின்ற புகழின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக வைரலாகி வருகின்றது

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement