• Jan 15 2025

இந்தியன் 2 இருந்து எஸ்கேப்பான மாஸ் ஹீரோ... யாருனு தெரியுமா? லீக்கான தகவல்

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமலஹாசன் நடித்த திரைப்படம் தான் விக்ரம். இந்த திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது. இதனால் கமலஹாசன் படக் குழுவினருக்கு மற்றும் இயக்குனருக்கு விலை உயர்ந்த பரிசு பொருட்களையும் கொடுத்தார்.

இதைத்தொடர்ந்து உலகநாயகன் கமலஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்பட்டது. கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் வரை இழுபட்டு வந்த இந்த திரைப்படம் கடந்த ஜூலை 12ஆம் தேதி உலக அளவில் வெளியானது.

மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் இந்தியாவில் மட்டும் இல்லாமல் வெளிநாடுகளிலும் கொண்டாடப்பட்டது. ஆனால் இந்த திரைப்படத்தை தியேட்டரில் பார்த்த பிறகு ரசிகர்கள் படு மோசமாக தமது விமர்சனத்தை வெளியிட்டார்கள்.


இதன் காரணமாக இந்தியன் 2 திரைப்படம் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை. ஷங்கரின் படங்களுக்குள் இந்த படம் தான் படு மோசம் என இணையதளங்களில் தாறுமாறாக விமர்சனங்கள் வெளியானது.

தற்போது இந்த திரைப்படம் ஓடிடியில் வெளியான போதும் இதை பார்த்த நெட்டிசன்கள் இந்த படத்தில் உள்ள குறைகளை தனியாக எடுத்து இணையத்தில் வெளியிட்டது மாட்டுமில்லாமல் அதிலுள்ள மிஸ்டேக்குகளை சுட்டி காட்டி வருகின்றார்கள். தற்போது வரையில் இணையத்தில் இந்தியன் 2 பற்றிய பேச்சுகள் தான் பேசு பொருளாக காணப்படுகின்றன.

மேலும் சித்தார்த்தையும் ட்ரோல் செய்ய தொடங்கி விட்டனர். முக்கியமாக படத்தில் அவர் பேசும், சித்ரா அரவிந்தன் சோஷியல் மீடியா, GO Back Indian ஆகிய வசனங்களில் அவர் பேசும் காட்சிகளை மட்டும் வெட்டி எடுத்து சித்தார்த்தை ட்ரோல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்தியன் 2 படத்தில் சித்தாத் கேரக்டரில் சிவகார்த்திகேயன் தான் நடிக்க இருந்தார் என தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனாலும் அந்த நேரத்தில் அவருடைய கைவசம் இரண்டு படங்கள்  இருந்ததால் அவர் நடிக்க மறுத்துவிட்டாராம். இதனால் சிவகார்த்திகேயன் தப்பித்து விட்டார் என அதனையும் ட்ரோல் பண்ணி வருகின்றார்கள்.


Advertisement

Advertisement