• Sep 20 2024

நயன்தாராவோடு என்னை ஒப்பிட வேணாம்- கோலமாவு கோகிலா ஹிந்தி ரீமேக்கில் நடிகை ஜான்வி கபூர்

stella / 2 years ago

Advertisement

Listen News!

டாக்டர், பீஸ்ட்,போன்ற இயக்கிய இயக்குநரான நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான முக்கிய திரைப்படம் தான் கோலமாவு கோகிலா. இப்படத்தில் நயன்தாரா சோலோ ஹீரோயினாக நடித்து அசத்தியிருப்பார்.இப்படத்தில் மூலம் தான் நெல்சன் இயக்குநராக அறிமுகமானார்.

காமெடி கலந்த சென்டிமென்ட் திரைப்படமான இப்படமானது ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றது.இப்படத்தில் தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் நடித்து வருகின்றார்.

தமிழ் படத்தின் ரீமேக்கில் ஜான்வி கபூர் லீடாக நடித்துள்ள நிலையில், தியேட்டரில் வெளியிட்டால் ஒர்க்கவுட் ஆகாது என்பதை புரிந்து கொண்டு நயன்தாராவை போலவே நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் இந்த படத்தை வெளியிடுகின்றனர்.

ஓடிடியில் படம் வெளியானாலும் அதற்கான புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். அந்த வகையில் அண்மையில் ஒரு பேட்டியில் கலந்து கொண்டு கூறியதாவது இந்த படம் முற்றிலும் கோலமாவு கோகிலா போல இருக்காது, இது ஒரு வட இந்திய படமாக இருக்கும். பஞ்சாபில் உள்ள பிஹாரி பெண்ணாக இந்த படத்தில் நடித்துள்ளேன். நயன்தாராவின் நடிப்போடு என்னை ஒப்பிட வேண்டாம்.

ஆரம்பத்தில் எங்க அம்மா ஸ்ரீதேவியுடன் ஒப்பிட்டார்கள், இப்படி பெரிய நடிகைகளுடன் சின்ன பொண்ணான என்னை ஒப்பிட வேண்டாம், எனது நடிப்பு புதுசாக இருக்கும். அதை ரசித்து நிச்சயம் பார்ப்பீர்கள் என நம்புகிறேன் என பேசி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement