• May 08 2024

கையில் சுத்தியலுடன் கொலை வெறியில் திரியும் விஷ்ணு விஷால்… வெளியான வீடியோ…கேள்வி எழுப்பும் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்த நாள் முதல் இன்றுவரை வித்தியாசமான கதையம்சங்களைக் கொண்ட படங்களைத் தேர்வு செய்து நடித்து வருபவர் நடிகர் விஷ்ணு விஷால். குறிப்பாக 'வெண்ணிலா கபடி குழு', 'ஜீவா', 'நீர்ப்பறவை', 'ராட்சசன்', 'எப்.ஐ.ஆர்' ஆகிய படங்கள் இவரிற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுக் கொடுத்திருக்கின்றன.

இதனைத் தொடர்ந்து இவர் தற்போது 'மோகன் தாஸ்' என்ற படத்தில் நடித்து வருகின்றார். இவரிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷும் நடித்திருக்கின்றார். இந்நிலையில் இன்றைய தினம் இவரது பிறந்த நாள் பரிசாக படக்குழுவினர் 'மோகன் தாஸ்' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளனர். அவ்வீடியோவில் அவர் 'happy birthday to me ' எனப் பாடல் பாடியபடி வரும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதோடு, விஷ்ணு விஷால் கையில் சுத்தியலை வைத்துக் கொண்டு கொலை வெறியுடன் தாக்கும் காட்சிகளும் இடம்பெற்றிருக்கின்றன.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் பிறந்தநாள் அதுவுமா இப்பிடியான வீடியோவா போடுவீங்க என அவரை நோக்கி கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement