• Sep 10 2024

இந்த நோக்கத்துல வாழை படம் பாக்க வராதீங்க..! சிறகடிக்க ஆசை பிரபலம் பகிர்

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

மாரி செல்வராஜ் இயக்கிய திரைப்படம்தான் வாழை. இந்த படத்தில் கலையரசன், ஜே. சதீஷ்குமார், திவ்யா துரைசாமி, நிகிலா விமல், ஜானகி உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் இன்றைய தினம் வெளியானது.

வாழை திரைப்படம் இயக்குனர் மாரி செல்வராஜின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை பார்த்த பலர் மிகவும் எமோஷனல் ஆகி அழுத காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன.

அத்துடன் இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பே சிறப்புக் காட்சி மூலம் படத்தை பார்த்த இயக்குனர் மணிரத்தினம், பாரதிராஜா உள்ளிட்டோர் வாழை திரைப்படம் மாரி செல்வராஜுக்கு நிச்சயம் பல விருதுகளை பெற்று தரும் என கூறி உள்ளார்கள். இயக்குனர் பாலாவும் கண் கலங்கியபடியே மாரி செல்வராஜுக்கு முத்தம் கொடுத்து பேச முடியாத நிலையில் திணறிய காட்சிகளும் வைரலாகி வருகின்றன.

மேலும் இந்த படத்தில் வரும் கிளைமாக்ஸ் காட்சி மனதை தொடும் வகையில் இருந்ததாகவும் இதில் இடம் பெற்றுள்ள இரண்டு பாடல்களும் மிகச் சிறப்பாக உள்ளதாகவும் மாரி செல்வராஜ் சீரான இடைவெளியில் படத்தை இயக்கியிருப்பதாகவும் ரசிகர்கள் தமது விமர்சனத்தை முன் வைத்திருந்தார்கள்.


இந்த நிலையில், வாழை திரைப்படத்தை பார்த்த சிறகடிக்க ஆசை சீரியலின் நடிகரான பழனியப்பன் இந்த படம் பற்றி கூறுகையில், வாழை படம் அட்டகாசமாக உள்ளது. மிகவும் சிறப்பான படம்.

கமர்சியல் படம் பார்க்கும் நோக்கில் வருபவர்கள் இந்த படத்தை பார்க்க வேண்டாம். அதற்கு காரணம் இந்த படம் மெதுவாகத்தான் நகரும். ஆனால் அவ்வளவு எமோஷனலாக இருக்கும் படத்தைப் பார்த்து விட்டு வெளியே வந்தவர்கள் கூடுதலாக அழுததை தான் பார்த்தேன்.

எப்படி ஒரு விவசாயிக்கு நல்ல சாப்பாடு கிடைக்கவில்லையோ, எப்படி ஒரு ஆடை தொழிலாளிக்கு நல்ல உடை கிடைக்கவில்லையோ, அது போலவே வாழை தொழில் செய்யும் தொழிலாளர்களுக்கும் பின்னாடி ஒரு பெரிய போராட்டமே இருக்கும். அதனை மிக அழகாக எடுத்துக் காட்டியுள்ளார் மாரி செல்வராஜ். இந்த படத்தை கட்டாயம் எல்லோரும் குடும்பத்தோடு வந்து பார்க்க முடியும் என்று இதற்கு பாசிட்டிவ் விமர்சனம் அளித்துள்ளார்.

Advertisement

Advertisement