• Sep 09 2024

பிக் பாஸ் சீசன் 8ல் கலந்து கொள்ளவுள்ள விஜய் டிவி நடிகர்! யாருனு பாருங்க..

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவி ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் எப்போது ஆரம்பம் ஆகும் என்று எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலாய் காத்து உள்ளார்கள். ஆனாலும் இது தொடர்பிலான உறுதியான தகவல் இதுவரையில் வெளியாகவில்லை.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை இடம்பெற்ற ஏழு சீசன்களும் வெற்றிகரமாக இடம்பெற்று வந்த நிலையில், இந்த முறை எட்டாவது சீசனில் உலகநாயகன் கமலஹாசன் கலந்து கொள்ளவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது.

இதைத் தொடர்ந்து கமலஹாசன் போல யார் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சரியானவராக இருப்பார் என்ற தேர்வில் பல நடிகர்கள், நடிகைகளின் பெயர் அடிபட்டன. ஆனாலும் இறுதியில் இதற்கு விஜய் சேதுபதி தான் தகுந்தவர் என்ற தகவலும் வெளியானது. ஆனால் இன்னும் உறுதியாக இல்லை.


இன்னொரு பக்கம் பிக் பாஸ் எட்டாவது சீசனில் பங்கு பற்றக்  கூடிய போட்டியாளர்கள் பற்றிய விபரங்கள் வெளியானது. அதில் குக் வித் கோமாளியில் பங்கு பற்றிய ஷாலினி சோயா, அஸ்வின், அருள், மாகாபா உட்பட பலரின் பெயர் அடிபட்டது.

இந்த நிலையில், தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சமீபத்தில் நிறைவுக்கு வந்த தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நடித்த ஹீரோ தீபக் பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொள்ள உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகர் தீபக் பல ஹிட் சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு கொள்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement

Advertisement