• May 19 2024

அடடே குன்னூரில் இவ்வளவு பெரிய பங்களா சாத்தியராஜ்ஜுக்கு இருக்கா?….வெளியான புகைப்படம்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் அதிகளவில் கொண்டாடப்பட்டு வரும் பிரபலங்களில் ஒருவர் நடிகர் சத்யராஜ். எவ்வளவு பெரிய விஷயமாக இருந்தாலும் சரி, எந்தப் பெரிய மேடையாக இருந்தாலும் சரி தனக்கு மனதில் தோன்றிய விஷயத்தை தைரியமாகப் பேசக்கூடிய திறமை இவருக்கு உண்டு. இவர் நடித்து வெளியாகி இருந்த படங்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பினையே பெற்றுக் கொடுத்திருக்கின்றன.

நடிகர் சத்தியராஜ் ஆரம்பத்தில் படங்களில் வில்லன் என்ற கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும், பின்னர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் என்ற இடத்தைப் பிடித்து இருக்கின்றார். அது மட்டுமல்லாது தற்போது இவர் பல குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வருகின்றார்.

பல வெற்றிப் படங்களில் நடித்திருந்தாலும் 'பாகுபலி' என்ற படமே இவருக்கு ரசிகர்கள் மத்தியில் மறக்க முடியாத அளவிற்கு பெரியளவிலான ரீச்சை பெற்றுக் கொடுத்தது. இந்நிலையில் இவர் தற்போது ஆர்.கே.பாலாஜி இயக்கியுள்ள 'வீட்டில விசேஷம்' என்ற படத்தில் நடித்திருந்தார். அப்படம் சமீபத்தில் வெளியாகி இருக்கின்றது. இப்படத்தில் இவருடன் இணைந்து ஆர்.கே.பாலாஜி, ஊர்வசி, அபர்ணா எனப் பலர் நடித்துள்ளனர்.

எத்தனை வயதாகினாலும் தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வருகின்ற நடிகர் சத்யராஜ்ஜுக்கு சிபிராஜ் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர். இதில் சிபிராஜ் தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக உள்ளார். ஆனால் திவ்யா வேறு துறைக்கு மாறிவிட்டார். இவர் இந்தியாவில் உள்ள டாப் நியூட்ரிசன்களில் ஒருவராக உள்ளார்.

நடிகர் சத்தியராஜ் தற்போது சென்னையில் தனது மகனான சிபிராஜ்ஜுடன் ஒன்றாக இருந்து வருகின்றார். இந்நிலையில் இவர்களுக்கு Coonoor இல் ஒரு பெரிய சொந்த வீடும் இருக்கின்றது. தனது அப்பாவை போலவே ஒரு நாத்திகவாதியாக இருக்கும் திவ்யா அந்த புகைப்படத்தை தற்போது தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இயற்கை வனப்புகளுக்கு மத்தியில் அழகாக இருக்கும் அவ்வீட்டின் புகைப்படமானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement