• Sep 17 2024

'தளபதி 67' படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் இது தானா? மாஸ்டர் பிளான் போடும் லோகேஷ் கனகராஜ்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று திரையுலகமே பொறாமைப்படும் அளவிற்கு தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் நடிகர் விஜய். அதாவது தனது 10-ஆவது வயதில் 'வெற்றி' என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருந்தாலும் 'நாளைய தீர்ப்பு' என்ற திரைப்படத்தின் ஊடாகவே நாயகனாக அறிமுகமாகியிருந்தார்.

இவரது திரையுலகப் பயணத்தில் திருப்பு முனையாக அமைந்த படம் 'பூவே உனக்காக' என்ற படம் தான். தனது நடிப்பினாலும், நடனத்தாலும் பல விருதுகளை வென்ற இவர் தொடர்ந்தும் பல படங்களில் நடித்து வருகின்றார். அது மட்டுமல்லாது இவர் தமிழ் சினிமாவில் தனது சொந்தக் குரலிலேயே ஒரு சில பாடல்களையும் பாடிப் பாராட்டும் பெற்றிருக்கின்றார்.

தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் தளபதி விஜய் இயக்குநர் லோகேஷின் இயக்கத்தில் வெளியாகிய 'மாஸ்டர்' படத்திற்குப் பின்னர் 'பீஸ்ட்' என்ற படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தினைத் தொடர்ந்து இயக்குநர் வம்சியின் இயக்கத்தில் 'வாரிசு' என்ற படத்தில் தற்போது நடித்து வருகின்றார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் விஜய்யின் 67-ஆவது படம் தொடர்பான அப்டேட்டுக்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன. அதாவது இப்படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். 'தளபதி 67' படம் முழுக்க முழுக்க தன்னுடைய பாணியில் இருக்குமென்று லோகேஷ் கனகராஜ் பேட்டிகளில் தெரிவித்து வருகின்றார். மேலும் இந்தப் படத்தில் தளபதி விஜய் 50-வயது கேங்ஸ்டராக நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது 'பிகில்' என்ற திரைப்படத்தில் விஜய் நடித்த ராயப்பன் என்ற கதாபாத்திரத்தை போன்று 'தளபதி 67' படத்திலும் விஜய்யின் கதாபாத்திரம் இருக்கும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்மையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியிருந்த 'விக்ரம்' படம் யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு மாபெரும் வெற்றியைப் பெற்றுக் கொடுத்திருந்தது. இதே போன்றே 'தளபதி 67' படமும் மாசான படமாக அமைந்து பெரியளவிலான வெற்றியை பெற்றுத் தரும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர் நம்ம விஜய் ரசிகர்கள்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement