• Oct 16 2024

நடிகர் சிம்ரனுக்கு இவ்வளவு பெரிய மகன்கள் இருக்கின்றார்களா?- வெளியாகிய லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

90களில் பல இளம் ரசிகர்களின் கனவு கனியாக இருந்தவர் நடிகை சிம்ரன். இயக்குநர் சபாபதி தேவசதேக்ஷின மூர்த்தி இயக்கத்தில் வெளியான, ரொமான்டிக் காமெடி திரைப்படமான 'விஐபி' படத்தில் நடிகர் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் சிம்ரன். இவர் நடித்த முதல் படமே சுமார் 100 நாட்கள் திரையரங்கில் ஓடியது மட்டுமின்றி, இவருடைய நடன அசைவுகளும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றது.


இதைத் தொடர்ந்து ஒன்ஸ்மோர், நேருக்கு நேர், பூச்சூடவா, அவள் வருவாளா, நட்புக்காக, கண்ணெதிரே தோன்றினால், வாலி, என தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்த சிம்ரன் ரசிகர்கள் மனதில் தனக்காக தனி இடத்தை பிடித்தார்.


 திருமணத்தின் பின்னர் சிலகாலம் நடிப்பிற்கு பிரேக் விட்டிருந்த சிம்ரன் தற்பொழுது மீண்டும் நடிப்பில் ஆர்வம் காட்டி வருகின்றார்.கடந்த ஆண்டு வெளிவந்த மகான், கேப்டன், ராக்கெட்ரி ஆகிய படங்களில் நடித்திருந்தார். மேலும் தற்போது அந்தகன், துருவ நட்சத்திரம், வணங்காமுடி என கைவசம் பல படங்களை வைத்துள்ளார்.


அடிக்கடி தன்னுடைய குடும்பத்துடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை கூட இன்ஸ்டாகிராமில் பதிவு செய்வார் சிம்ரன். அந்த வகையில் தற்பொழுது தனமு குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ளார். இந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருவதைக் காணலாம்.



Advertisement