• May 20 2024

பிக்பாஸ் சீசன் 7 இல் வைல்ட்காட் என்ட்ரியாக நுழையவுள்ளவர்கள் யார் தெரியுமா?- இந்த சீரியல் நடிகையும் வருகின்றாரா?

stella / 6 months ago

Advertisement

Listen News!


சின்னத்திரையில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஒளிப்பரப்பாகி வருகிறது பிக்பாஸ் சீசன். இதன் ஆறு சீசன்களை கமலே தொகுத்து வழங்கிய நிலையில் ஏழாவது சீசனையும் அவரே தொகுத்து வழங்கி வருகின்றார். 7வது சீசன் ஆரம்பித்து 24 நாட்களைக் கடந்துள்ளது. இதுவரை நிகழ்ச்சியிலிருந்து மூன்று பேர் வெளியேறியுள்ளனர்.

அதன்படி இறுதியாக விஜய் வர்மா வெளியேறியிருந்தார். நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்து ஹவுஸ்மேட்ஸ் தங்களுக்கிடையில் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். மறுபுறம் மணி மற்றும் ரவீனாவின் காதலும் ரசிகர்களை சலிப்படைச் செய்துள்ளது.


மேலும் நேற்றைய தினம் வைல்ட்காட் என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் 5 பேர் என்ட்ரி கொடுக்கவுள்ளதாக கூறப்பட்டது. அதன்படி அதில் என்ட்ரி கொடுக்கவுள்ள மூன்று பேர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது பாடகி மானசி,விஜே அர்ச்சனா,பிஷ்னஸ்மேன் ஷாம் ஷாமுவேல்ஸ் ஆகியோரே என்ட்ரி கொடுக்கவுள்ளதாக கூறப்படுகின்றது. அத்தோடு மற்ற இருவர் யார் என்ற தகவல் விரைவில் வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement