• Jun 19 2024

லியோ படத்தின் பாடல்களால் புதிய சிக்கலில் சிக்கிய அனிரூத்- தீவிர விசாரணை நடத்தத் திட்டம்

stella / 7 months ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய்யின் லியோ படம் அண்மையில் வெளியாகியது. இந்தத் திரைப்படம் வசூலில் அள்ளிக் குவித்தாலும் படங்களுக்கு கலவையான விமர்சனங்களும் கிடைத்து வருகின்றது.இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்திருந்தார். படத்தில் பாடல்களையும் பிஜிஎம்மையும் அவர் தெறிக்க விட்டுள்ளார்.

லியோ திரைப்படம் ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோவின் படத்தின் வசூலையே முறியடித்து விட்டதாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இந்த படத்தில் இடம்பெற்ற Am just a ordinary person பாடலை Peaky Blinderல் இருந்து அனிரூத் காப்பி அடித்து விட்டதாக சர்ச்சை வெடித்துள்ளது.


5 நாட்களில் லியோ திரைப்படம் 500 கோடி வசூலை நெருங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், படக்குழு முதல் நாள் வசூலை தவிர மற்ற எதையும் இதுவரை அறிவிக்கவில்லை.

இந்திய சினிமாவில் காப்பி சர்ச்சை அடிக்கடி எழுந்து கொண்டே இருக்கிறது. அதிலும் அனிரூத் இசையமைக்கும் பாடல்கள் எல்லாமே சமீப காலமாக மிகப்பெரிய ஹிட் அடித்து வரும் நிலையில், ஏகப்பட்ட காப்பி சர்ச்சையும் வெடித்து வருகின்றது. லியோ படத்துக்கும் அதே போன்ற ஒரு சர்ச்சையில் வசமாக சிக்கியிருக்கிறார் அனிரூத்.

லியோவில் இடம் பெற்ற ஆர்டினரி பர்சன் பாடல் நேற்று யூடியூபில் வெளியான நிலையில், ரசிகர்கள் பலரும் Peaky Blinder படத்துக்கு இசையமைத்த Otnickaவிடம் ரசிகர்கள் அந்த பாடலை டேக் செய்து, எங்கே போயிட்டீங்க.. இந்த பாடல் உங்களுடைய 'I'm not outsider' பாடலின் காப்பி என குறிப்பிட்டுள்ளனர்.

என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. கூடிய விரைவில் விசாரணை நடத்தி என்ன ஆனது என்கிற பதிலை சொல்கிறேன். இதுவரை என்னிடம் யாரிடமும் இந்த பாடலுக்காக காப்பி ரைட்ஸை பெறவில்லை என்றும் அவர் அதிரடியாக தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement