• May 08 2024

விக்ரம் நடிப்பில் ஆக்‌ஷன் பேக்கேஜாக வெளியாகியிருக்கும் துருவ நட்சத்திரம் படத்தின் ட்ரெய்லர்

stella / 6 months ago

Advertisement

Listen News!

நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் துருவ நட்சத்திரம். இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் விக்ரமுடன் சிம்ரன், பார்த்திபன், ஐஸ்வர்யா ராஜேஷ், ரிது வர்மா, ராதிகா சரத்குமார், டிடி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார்.

இந்தப் படமானது கடந்த 2017ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் சில பிரச்னைகளால் துருவ நட்சத்திரத்தின் நிலை என்னவென்றே தெரியாமல் இருந்தது. நிலைமை இப்படி இருக்க சமீபத்தில் விக்ரமும், கௌதமும் சந்தித்து துருவ நட்சத்திரத்தின் அடுத்தக்கட்ட வேலைகள் குறித்து ஆலோசித்தனர். 


மேலும் படத்தை முழுவதும் பார்த்த விக்ரமுக்குப் படம் ரொம்பவே பிடித்துவிட்டதாகவும் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவும் தயாராக இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் துருவ நட்சத்திரம் படத்தின் இரண்டாவது ட்ரெய்லர் வெளியாகியிருக்கிறது. ட்ரெய்லர் பக்கா ஸ்டைலிஷான ஆக்‌ஷன் பேக்கேஜாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement