• Feb 09 2026

சரவணனின் வார்த்தையால் ஷாக்கில் குடும்பம்.! கண்ணீரில் மயில்.. பொங்கியெழுந்த பாக்கியம்

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, கோமதி பாண்டியனைப் பார்த்து நாம யாரையும் ஏமாத்தல இவள் தான் நம்மளை எல்லாம் ஏமாத்திட்டால் நீங்க எதையும் நினைச்சு கவலைப்படாதீங்க என்று சொல்லுறார். மறுபக்கம் சக்திவேல் காலையில இதையெல்லாம் பார்க்கிறதுக்கு ஆனந்தமா தான் இருக்கு என்கிறார். 


மேலும், அவனே பார்த்து வைச்ச பொண்ணு என்று என்ன ஆட்டம் போட்டான் இந்த பொண்ணு என்னடா என்றால் அவனை அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கு என்று சொல்லி சந்தோசப்படுறார் சக்திவேல். அதைக் கேட்ட காந்திமதி கொஞ்ச நேரம் சும்மா இரு என்கிறார். 

அதனை அடுத்து பாக்கியம் இங்க வந்து என்ன பண்ணுற மயிலு வா நாம வீட்ட போவோம் என்கிறார். பின் மயில் இவங்க கதவை திறக்க மாட்டேன் என்று சொல்லுறாங்க என அழுகிறார். இதைத் தொடர்ந்து பாக்கியம் எல்லாருக்கும் பயமா.. கதவைத் திறங்க என்று கோபமாக கத்துறார். 


அதைக் கேட்ட சரவணன் வீட்டு வாசலில நின்று கத்த வேணாம் வெளியில போங்க என்கிறார். மேலும் பொய் சொல்லி கல்யாணம் பண்ணும் போது உங்களுக்கு மரியாதை எல்லாம் தெரியலையா என்று கேட்கிறார். அதனை அடுத்து உங்க குடும்பத்தைப் பார்க்கவே பிடிக்கல இங்க இருந்து கிளம்புங்க என்கிறார் சரவணன்.

பின் சரவணன் பாண்டியன் கிட்ட எனக்கு டிவோர்ஸ் வாங்கிக் கொடுத்திடுங்க என்று கேட்கிறார். அதைக் கேட்ட பாக்கியம் என்ர பொண்ணோட வாழ்க்கை அவ்வளவு சாதாரணமா போய்ட்டா என்று கேட்கிறார். அதனை அடுத்து பாக்கியம் தான் எல்லாத்தையும் பார்த்துக்கிறேன் என்று சொல்லிட்டு அங்கிருந்து கிளம்புறார். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement

Advertisement