• Sep 20 2024

கமலின் அடுத்த படத்தின் இயக்குநர் யார் தெரியுமா?-சூப்பர் இயக்குநரைத் தான் புக்கிங் செய்திருக்கிறார்

stella / 2 years ago

Advertisement

Listen News!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இன்றைய தினம் பிரமாண்டமாக வெளியாகியுள்ள திரைப்படம் தான் விக்ரம் . இப்படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளதோடு அனிரூத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி பகத் பாசில் உள்பட பலர் நடித்திருக்கின்றனர்.

இந்தப் படம் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்று வரும் நிலையில் ரசிகர்கள் கொண்டாட்ட மனநிலையோடு படத்தைப் பார்த்து வருகின்றனர். அத்தோடு வசூலிலும் இப்படம் அள்ளிக் குவிக்கும் என்றும் நம்பப்படுகின்றது.

இந்நிலையில் கமல் தன்னுடைய அடுத்த படம் குறித்து தற்போது ஒரு தகவலைப் பகிர்ந்துள்ளார். சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கமலிடம் அடுத்த பட இயக்குநர் பற்றி கேள்வி கேட்ட போது “மாலிக் படத்தின் இயக்குநர் மகேஷ் நாராயணன் என்றும் தயாரிப்பு ராஜ்கமல் பிலிம்ஸ்” என்று கூறியுள்ளார்.

மகேஷ் நாராயணன் விஸ்வரூபம் படத்தின் படத்தொகுப்பாளராக பணியாற்றியவர். சமீபத்தில் பகத் ஃபாசில் நடிப்பில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற மாலிக் திரைப்படம் மூலமாக கவனிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

  • சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement