துல்லியமான திரைக்கதைகள், ஸ்டைலான ஆக்ஷன், ரசிகர்களை மயக்கும் மாஸ் காட்சிகள் – இவை எல்லாம் ஒரே திரையிடலில் கொண்டு வரக்கூடியவர் லோகேஷ் கனகராஜ் தான். ஆனால், இதற்கெல்லாம் மேலாக அவர் திரைப்படங்களில் காட்டும் ஒரு “சிக்னேச்சர் ஸ்டைல்” ரசிகர்களின் மனங்களை கவர்ந்துள்ளது – அதாவது, ஒரு பழைய ஹிட் பாடலை முக்கியமான ஆக்ஷன் காட்சிகளில் சேர்ப்பது!
‘லியோ’ படத்தில் “கரு கரு கருப்பாயி” மற்றும் “தாமரை பூவுக்கும்”, ‘கைதி’யில் “ஆசை அதிகம்”, 'விக்ரம்' படத்தில் “மெட்ரோ சேனல்”, “சாத்து நட சாத்து” என vintage பாடல்களைச் செம்ம அதிரடியில் பயன்படுத்தியுள்ளார். இவை ஒவ்வொன்றும் ரசிகர்களிடம் ஆச்சரியத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தின.
இந்த பாணி தற்போது உலகம் முழுவதும் வெளியாகி உள்ள அவரது புதிய படம் ‘கூலி’யிலும் தொடர்கிறது. இந்தப் படத்தில், பிரசாந்த் நடித்த ‘கல்லூரி வாசல்’ படத்தில் இடம்பெற்ற “லயோலா காலெஜ் லைலா” என்ற பாடல், ஒரு முக்கியமான சண்டைக் காட்சியில் இடம் பெற்றிருப்பது ரசிகர்களிடம் வித்தியாசமான வரவேற்பை பெற்றுள்ளது.
லோகேஷ் தனது சினிமா பாணியில் மட்டுமல்ல, இசை தேர்விலும் ரசிகர்களை திருப்திப்படுத்துகிற விதத்தில் தனக்கென ஒரு அடையாளம் உருவாக்கியிருக்கிறார். பழைய பாடல்களையும் புதிய அனுபவமாக மாற்றும் அவரது திறமைக்கு இது ஒரு அழகான எடுத்துக்காட்டு!
Listen News!