• Apr 28 2024

தற்கொலை மிரட்டலால் மிரண்டு போன சல்மான் கார் என்ன செய்துள்ளார் தெரியுமா?- சாவு பயத்தை காட்டிட்டாங்க..

stella / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய படங்களில் நடித்து முன்னனி நடிகையாக வலம் வந்த நடிகை பூஜா ஹெக்டே தற்போது பாலிவுட்டிலும் பிசியான நடிகையாக மாறிவிட்டார். சல்மான் கானுக்கு ஜோடியாக அவர் நடித்து வரும் நிலையில், இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து விட்டதாக பாலிவுட்டில் பயங்கரமாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக சல்மான் கானும், பூஜா ஹெக்டேவும் பட ப்ரோமோஷனுக்கு உதவுகிறதே என இதுவரை சைலன்ட்டாகவே உள்ளனர்.

நடிகர் சல்மான் கானுக்கு எந்தளவுக்கு ரசிகர்கள் உள்ளனரோ அதே அளவுக்கு ஹேட்டர்களும் உள்ளனர். சமீபத்தில், நடிகர் சல்மான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டலும், நடிகர் சல்மானுக்கு தனிப்பட்ட முறையில் கொலை மிரட்டலும் வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இந்நிலையில், வெளியே செல்லும் போது விரோதிகளால் தனக்கு எந்த பாதிப்பும் ஆகிவிடக் கூடாது என்கிற கவலையில் தற்போது புல்லட் ப்ரூஃப் கொண்ட Nissan Patrol SUV காரை வாங்கி இருக்கிறாராம். சமீபத்தில், அந்த காரில் தனது பாதுகாவலர்களுடன் வெளியே சல்மான் கான் வந்த செய்தி பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன.


முன்னதாக Land Cruiser LC200 எனும் புல்லட் ப்ரூஃப் காரை வைத்திருந்த சல்மான் கான் தற்போது அதை விட அதிக B6, B7 பாதுகாப்பு கொண்ட புல்லட் ப்ரூஃப் காரை பல கோடிகள் கொடுத்து வாங்கி உள்ளதாக கூறுகின்றனர். வரும் ஏப்ரல் 21ம் தேதி பூஜா ஹெக்டேவுடன் அவர் இணைந்து நடித்துள்ள Kisi Ka Bhai Kisi Ki Jaan படம் திரைக்கு வருகிறது. அடுத்ததாக டைகர் 3 படத்திலும் நடித்து வருகிறார். இந்த ஆண்டு ஜனவரி 25ம் தேதி வெளியான ஷாருக்கானின் ஜவான் படத்திலும் டைகராக வந்து மாஸ் காட்டியிருந்தார் சல்மான் கான்.


Advertisement

Advertisement

Advertisement