தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் சூர்யா பிஸியாக திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் 'ரெட்ரோ' படத்தை முடித்த அவர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் முழுமூச்சாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் சூர்யாவின் பிறந்தநாளான ஜூலை 23 அன்று இப்படத்தின் டைட்டிலை வெளியிடுவதற்கான தகவல் சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்த படம் "ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்" தயாரிப்பில் உருவாகி சூர்யாவுக்கு ஜோடியாக பிரபல நடிகை திரிஷா நடித்து வருகிறார். இவர்கள் இருவரும் மௌனம் பேசியதே மற்றும் ஆறு போன்ற படங்களில் இணைந்து நடித்திருப்பதால் மீண்டும் அவர்களது கூட்டணி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இப்படத்தில் நட்டி நட்ராஜ், யோகிபாபு, சுவாசிகா, ஷிவதா, இந்திரன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் படத்தினை சாய் அபயங்கர் இசையமைகவுள்ளதுடன ஆர்.ஜே.பாலாஜி முக்கியாக கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
தற்போது, "சூர்யா 45" படத்தின் முதல் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கிடையில் 'பேட்டைக்காரன்' மற்றும் 'கருப்பு' போன்ற டைட்டில்கள் பரிசீலிக்கப்படுகின்றன. மேலும் 'ரெட்ரோ' படம் தற்போது திரையரங்குகளில் வெற்றி நடைபோட்டு வருகின்றது.
Listen News!