• Oct 09 2024

லேடி சூப்பர் ஸ்டாருக்கு நயன்தாரா என்ற பெயர் எப்பிடி வந்திச்சு தெரியுமா?- அடடே இந்த இயக்குநர் தான் காரணமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!


தென்னிந்திய திரைத்துறையில் லேடி சூப்பர் ஸ்டாராக வளம் வருபவர் நடிகை நயன்தாரா சினிமாவில் அசைக்க முடியாத ரசிகர்களைப் பெற்று உள்ளார்.விக்கேனஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடி தான் படத்தில் நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது.

அதன்பின்னர், நீண்ட ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.7 ஆண்டுகள் காதலித்த நிலையில் 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள்.பின்னர் வாடகை தாய் மூலமாக உயிர் மற்றும் உலகம் என்ற இரட்டைக் குழந்தைகளுக்கு பெற்றோர்களாக மாறி இருக்கிறார்கள்.


தொடர்ந்து பிஸியாக நடித்து வரும் நயன்தாராவின் இயற்பெயர் டயானா மரியம் குரியன். இவர் திரைத் துறையில் சேர்ந்த பின்னரே தனது பெயரை மாற்றிக் கொண்டார்.இந்த நிலையில் தனது பெயரை மாற்றியது ஏன் என்பது குறித்து நயன்தாரா பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

அதில் பேசிய அவர் தன்னை மலையாளத்தில் அறிமுகம் செய்த இயக்குநர் சத்யம் அந்திகாட் தனது பெயரை மாற்றியதாக தெரிவித்துள்ளார்.அதாவது  “ எனது முதல் இயக்குநர் என் பெயரை மாற்ற வேண்டும் என்று கூறினார். எனக்கு அப்போது எதுவும் தெரியாது சரி என்று கூறினேன். ஆனால் ரொம்ப நாள் அவர் எனக்கும் பெயர் வைக்கவில்லை. படத்திற்கும் பெயர் வைக்கவில்லை. ஒருநாள் நானே அவரிடம் சென்று பெயர் வைக்கிறீங்களா இல்லையா என்று கேட்டேன்.. அதற்கு அவர் 20 - 30 பெயர் லிஸ்ட் போட்டு வைத்துள்ளேன் என்று கூறி ஒரு பெரிய லிஸ்டை கொடுத்தார்.


 அதில் எனக்கு நயன்தாரா என்ற பெயர் எனக்கு பிடித்திருந்தது. அதை அவரிடம் கூறினேன்.. அவரும் இந்த பெயரை வைக்கவே நினைத்திருந்தேன் என்று கூறினார். அப்படி இந்த பெயர் வந்தது தான்” என்றும் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement