• Apr 30 2024

தொடர்ந்து குவியும் படவாய்ப்புகள்..... யோகிபாபுவிற்கு இத்தனை கோடி சம்பளமா...!

subiththira / 7 months ago

Advertisement

Listen News!

காமெடி நடிகர் யோகி பாபு தற்போது சினிமாத்துறையில் சில படங்களின் கதையின் நாயகனாகவும்,  காமெடியனாகவும் தன்னை நிரூபித்துக் காட்டிவரும் ஒரு சிறந்த நடிகர். இவர் மண்டேலா ,கோலமாவு கோகிலா, கூகுள் குட்டப்பா, ரெமோ போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.


இவரின் எதார்த்தமான காமெடி கலந்த நடிப்பு ரசிகர்களை கவர்ந்துள்ளது. அந்த வகையில் தொடர்ந்து பல பட வாய்ப்புகளும் கிடைத்து வருகிறது. அதனால் ஒரு படத்திற்கு கிட்டத்தட்ட ஒரு கோடி சம்பளம் வரை வாங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  தன்னுடைய பேச்சை காமெடியாக மாற்றி ரசிகர்கள் ரசிக்கும்படி தற்போது வேற லெவலில் மாஸ் காட்டிக்கொண்டு இருக்கிறார். 


இவர் நடித்த டாக்டர், பீஸ்ட் மற்றும் சில வாரங்களுக்கு முன் ரிலீஸ் ஆனா ஜெயிலர் போன்ற படங்களில் மூலம் காமெடியனாக  தற்போது வளர்ந்து வருகிறார். அந்த வகையில் தொடர்ந்து பல பட வாய்ப்புகளும் கிடைக்கவே ரொம்ப  பிஸியாக நடித்து வருகிறார். இதனாலே யோகி பாபுவின் தூக்கமே தொலைந்து விட்டது என்றே சொல்லலாம்.


தற்போது வரை ஒரு படத்திற்காக 25 லட்சம் ரூபாயை சம்பளமாக பெற்றுகொள்ளும் இவர் அடுத்து அடுத்து தொடர்ந்து பல படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார் எதிர் வரும் காலங்களில்  இவருடைய திரைப்படங்கள் திரைக்குவரவிருக்கிறது.

Advertisement

Advertisement

Advertisement