1996 ஆம் ஆண்டு பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் படம் மாபெரும் வெற்றி கண்டது. அந்த நாட்களிலேயே சுமார் 61 கோடி வரை இந்த படம் வசூலித்திருந்தது.
கிட்டத்தட்ட 28 ஆண்டுகள் கழித்து இதன் இரண்டாம் பாகம் பிரம்மாண்ட செலவில் எடுக்கப்பட்டு கடந்த 12ம் தேதி திரைக்கு வெளியிடப்பட்டிருந்தது.
இந்த படம் உருவாகுவதற்கு சுமார் நான்கு, ஐந்து வருடங்கள் ஆகியுள்ளது. அதற்குக் காரணம் இந்த படம் எடுக்கப்பட்டபோது இதில் ஏற்பட்ட டெக்னிகல் பிரச்சினை மற்றும் விபத்துக்கள், இதில் நடித்தவர்களின் உயிர் இழப்பு போன்ற பல காரணங்களினால் இந்த படம் வெஇழுபறியாக காணப்பட்டது.
இந்த நிலையில், இந்தியன் 2 படத்தை செதுக்கிய ஷங்கரின் சம்பள விபரம் பற்றிய சில தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதன்படி இந்தியன் 2 படத்திற்காக இயக்குனர் சங்கர் சுமார் 50 கோடி வரை சம்பளம் வாங்கி உள்ளாராம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
Listen News!