• Sep 21 2024

அசால்ட்டாக கோடிகளை அள்ளும் அந்தகன் ... முதல் இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

நடிகர் பிரசாந்த் நடிப்பில் தியாகராயன் இயக்கிய திரைப்படம் தான் அந்தகன். இந்த திரைப்படம் வெளியாகி  நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் சக்கைப் போடு போட்டு வருகின்றது.

ஹிந்தியில் ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்தப் படம் அந்தாதுன். அந்தப் படத்தின் தமிழ் ரிமேக் என்றவுடன் ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. அத்துடன் நடிகர் பிரசாந்த் இந்த படத்தின் மூலம் மீண்டும் கம்பேக் கொடுப்பதால் அவரது ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்பட்டது.

அதிலும் அந்தகன் படத்தை பார்த்த ரசிகர்கள் நன்றாக இருப்பதாகவும் அந்த படத்தில் சிம்ரன் நடிப்பு மிகவும் பிரமதமாக  இருப்பதாகவும் கூறி வருகின்றார்கள். அந்தகன் படத்தை நடிகர் பிரசாந்த் மற்றும் அவருடைய பட குழுவினர் சென்னை ரோகினி தியேட்டரில் சேர்ந்து பார்த்திருந்தார்கள். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரல் ஆனது.


இந்த நிலையில் ஆகஸ்ட் 9 ஆம் தேதி வெளியான அந்தகன்  படத்தின் இரண்டாவது நாள் பாக்ஸ் ஆபீஸ் கலக்சன் வெளியாகியுள்ளது.

அதன்படி அந்தகன் திரைப்படம் முதல் நாளில் 65 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளதாக கூறப்படுகின்றது. அதேபோல இரண்டாவது நாளான நேற்றைய தினம் விடுமுறை நாள் என்பதால் ஒரு கோடியே 15 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளதாக கூறப்படுகின்றது.

அதன்படி முதல் இரண்டு நாட்களில் மட்டும் ஒரு கோடி 75 லட்சம் வசூல் ஆகியுள்ளது. வார இறுதி நாளான இன்றும் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இது தொடர்பான அதிகார்வபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement