• May 19 2024

இத்தனை கோடிக்கு மேல் லாபமா... ஜவான் வெற்றிக்கு மேல் வெற்றி... தயாரிப்பாளருக்கு எவ்வளவு ஷேர் தெரியுமா...

subiththira / 7 months ago

Advertisement

Listen News!

மாபெரும் வெற்றி திரைப்படமாக வலம் வரும் அட்லீ இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் ஜவான். மாபெரும் எதிர்பார்ப்பு இப்படத்தின் மீது இருந்தது. அந்த எதிர்பார்ப்பை எல்லாம் ஜவான் பூர்த்தி செய்ததா என்று கேட்டால் ஆமா என்றுத்தான் சொல்ல வேண்டும் காரணம் ரசிகர்களால் நல்ல வரவேட்பை பெற்ற இத்திரைப்படம் வசூலிலும் முன்னணியில் இருக்கிறது.  


அந்தவகையில் நிச்சியமாக  ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் என திரை வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது அதே போல் ரூ. 1000 கோடியை கடந்த இதுவரை ரூ. 1100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது ஜவான். இது  மாபெரும் வசூல் சாதனை தான் .


ஜவான் திரைப்படம் தான் பாலிவுட் சினிமாவில் அதிகம் லாபம் கொடுத்த திரைப்படம் என பேசப்படுகிறது. இப்படத்தின் டிஜிட்டல் + சாட்டிலைட் + ம்யூசிக் உரிமைகள் மட்டுமே ரூ. 250 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.இதுவரை ரூ. 1100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ள நிலையில் இதன்மூலம் கிட்டத்தட்ட ரூ. 480 கோடி வரை தயாரிப்பாளருக்கு ஷேர் கிடைத்துள்ளது. இதன்மூலம் ரூ. 730 கோடி வருவாய் கிடைத்துள்ளது.


இதுவரை எந்த ஒரு ஹிந்தி படத்திற்கும் இவ்வளவு பெரிய லாபம் கிடைத்தது இல்லை என கூறப்படுகிறது. ஜவான் படத்தின் மொத்த பட்ஜெட் மட்டுமே ரூ. 350 கோடி ஆகும். ரூ. 730 கோடியில் ரூ. 350 கோடி பட்ஜெட்டை கழித்துவிட்டால் சுமார் ரூ. 380 கோடி லாபம் கிடைத்துள்ளது.


இந்த லாபம் மூலம் பாலிவுட் திரையுலகில் புதிய சாதனையை ஷாருக்கான் ,அட்லீ கூட்டணி படைத்துள்ளது. இந்த சாதனை திரைப்பட குழுவினருக்கு பெரிய மகிழ்ச்சியை தந்துள்ளது.

Advertisement

Advertisement