• Dec 27 2024

பல லட்சங்கள் சம்பளம் வாங்கும் வாணி போஜனின் நெட் ஒர்த் எவ்வளவு தெரியுமா? நம்பவே முடியல..

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் இடம் பிடிக்கும் நடிகர்கள், நடிகைகள் ஏராளம். அவர்களுள் ஒரு சிலரே வெள்ளித் திரையிலும் வெற்றி கண்ட பிரபலங்களாக வலம் வருகின்றார்கள்.

அதன்படி சின்னத்திரையில் இருந்து வெள்ளித் திரைக்கு தாவிய நடிகை தான் வாணி போஜன். இவர் தனக்கேற்ற திரைகதைகளை தேர்ந்தெடுத்து சிறப்பாக நடித்து வருகின்றார். இதன் காரணத்தினால் இவருக்கு சின்னத்திரையில் கிடைத்த அமோக வரவேற்பு வெள்ளித் திரையிலும் கிடைத்து வருகின்றது.

தமிழகத்தில் உள்ள ஊட்டி மாவட்டத்தை சேர்ந்தவர் தான் வாணி போஜன். இவர் சிறு வயதில் இருந்தே நடிப்பில் ஆர்வத்தைக் கொண்ட ஒருவராக காணப்பட்டுள்ளார். தற்போது இவருக்கு 36 வயதாகின்றது. ஆனாலும் இவர் இதுவரையில் திருமணம் செய்து கொள்ளவில்லை. இவருக்கு எதிர்ச்சியாகவே தி சென்னை சில்க்ஸ் விளம்பரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதனை  சரியாக பயன்படுத்திக் கொண்டார் வாணி போஜன்.

d_i_a

அதன் பின்பு ஊர் இரவு என்ற படத்தில் அறிமுகமாவதற்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும் அந்த படம் தோல்வியை சந்தித்தது. எனினும் தனது விடாமுயற்சியின் காரணமாக அடுத்து அதிகாரம் 79 என்ற படத்தில் நடித்தார். அதுவும் சரியாக அமையவில்லை. இதனால் மீண்டும் சீரியலில் களமிறங்கினார்.


2013 ஆம் ஆண்டு தெய்வமகள் என்ற சீரியலில் நடித்தார். இந்த சீரியல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது. அதன் பின்பு இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. இவர் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது .


இதை தொடர்ந்து லாக் கப், மலேசியா டு அமினிஷியா, மிரள், பாயும் புலி நீ எனக்கு, லவ், அஞ்சாமை, போன்ற பல படங்களில் நடித்தார். தற்போது இவருடைய கைவசம் பகைவருக்கு அருள்வாய், கேசினோ, ஆகிய சில படங்கள் உள்ளன.

இந்த நிலையில், தமிழ் சினிமாவில் 50 லட்சம் வரை சம்பளம் வாங்கக்கூடிய ஹீரோயினாக வாணி போஜன் மாறி உள்ளார். இவருடைய சொத்து மதிப்பு 7 கோடி ரூபாய் இருக்கும் என்று தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.


Advertisement

Advertisement