சமீபத்தில் சமூக வலைதளங்களில், ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சனின் திருமணத்தில் பிரச்சனைகள் இருப்பதாகவும், இருவரும் விவாகரத்து செய்ய இருக்கிறார்கள் என்பதாகவும் வதந்திகள் பரவின. இது, ஐஸ்வர்யா ராய் ஆனந்த் அம்பானியின் திருமண நிகழ்ச்சிக்கு மகளுடன் மட்டும் கலந்து கொண்டது மற்றும் அபிஷேக் பச்சன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்காதது போன்ற செய்திகளால் மேலும் தீவிரமடைந்தது.
1994 ஆம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்ற ஐஸ்வர்யா ராய், தமிழ், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்தும், ரசிகர்களை ஈர்த்தும் இந்திய சினிமாவில் முக்கிய இடத்தை பிடித்துள்ளார். பல வெற்றிப்படங்களில் நடித்த இவர், 2007 ஆம் ஆண்டு பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆராத்யா என்ற ஒரு மகளும் உள்ளார்.
ஆனால், அண்மையில் மும்பையில் நடைபெற்ற பிரம்மாண்டமான விருந்து நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டனர். அவர்கள் மகிழ்ச்சியான போக்கில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.
Listen News!