• Apr 28 2024

தடைகளைத் தாண்டி... வசூல் வேட்டையில் மாஸ் காட்டும் 'பிரின்ஸ்'... இதுவரை எத்தனை கோடி தெரியுமா...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் ஆரம்பத்தில் சின்னத்திரையில் இருந்து பின்னர் தன்னுடைய கடின உழைப்பினால் வெள்ளித்திரைக்கு வந்து இன்று தமிழ் சினிமாவின் வெற்றி நாயகனாக வலம் வருகின்றார். 


அதுமட்டுமல்லாது இவர் நடிக்கும் படங்கள் அனைத்துமே வெற்றிப்படங்கள் தான் என்று கூறுமளவிற்கு இன்று வளர்ந்து நிற்கின்றார்.

அந்தவகையில் இவரின் நடிப்பில் வெளியாகிய 'டாக்டர்' திரைப்படமானது இவருக்கு அதிகளவில் வெற்றியை பெற்றுக் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் 'டான்' திரைப்படம் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றி அடைந்தது. 


இந்நிலையில் தொடர்ச்சியாக இரண்டு வெற்றிகளை பெற்ற சிவகார்த்திகேயன் நடிப்பில் ஹாட்ரிக் வெற்றியை குறிவைத்து சமீபத்தில் 'பிரின்ஸ்' படம் வெளியாகி இருக்கின்றது. அதாவது தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் முதல் முறையாக சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படம் தான் பிரின்ஸ்.


இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து மரியா எனும் அறிமுக நடிகை நடித்திருந்தார். இவர் உக்ரைன் நாட்டை சேர்ந்த மாடல் ஆவர். மேலும், இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்திருந்தார். வெளியான நாளிலிருந்தே இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகின்றது. 


இந்நிலையில் அப்படியிருந்தும் பிரின்ஸ் படம் ஆனது உலகம் முழுவதும் ரூ 50 கோடி வசூலை எட்டியுள்ளது. இதற்கான காரணம் கண்டிப்பாக சிவகார்த்திகேயன் ஸ்டார் பவர் என்று தான் சொல்ல வேண்டும். அதாவது இத்தனை நெகட்டிவ் கருத்துக்களையும் தாண்டி ரூ 50 கோடி வசூல் வந்தது என்பது பாராட்டத்தக்க ஒரு பெரிய விஷயம் தான்

Advertisement

Advertisement

Advertisement