• Apr 24 2024

திரையில் உம்மை பிரதிபலிக்க" நான் என்ன தவம் செய்தேனோ- ஜெயம் ரவி போட்ட நெகிழ்ச்சிப் பதிவு

stella / 1 year ago

Advertisement

Listen News!

சோழ மன்னரான ராஜ ராஜசோழனின் சதய விழா ஒவ்வொரு வருடமும் சிறப்பாகக் கொண்டாடி வருவதுண்டு.இதனால் இந்த வருடத்திலிருந்து தமிழக அரசு அவ்விழாவைக் கொண்டாடும் என்று அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியிருந்தது.

ராஜ ராஜ சோழனின் 1037-வது சதய விழாவை ஒட்டி அவர் கட்டிய வரலாற்று  சிறப்புமிக்க தஞ்சை பெரிய கோவில் விழாக்கோலம் நடத்தப்பட்டது. ஏராளமான மக்கள் அக்கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்து சென்றனர். முந்தைய ஆண்டுகளை விட இந்த ஆண்டு சற்று கூட்டம் அதிகமாகவே இருந்தது என்று கூறி வருகின்றனர்


இதற்கு முக்கிய காரணம் பொன்னியின் செல்வன் திரைப்படம் தான் என்று கூறப்படுகின்றது. அப்படம் ரிலீசான பின்னர் தஞ்சை பெரிய கோவிலுக்கு வருவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வந்த நிலையில், தற்போது சதய விழாவிலும் அந்த படம் ஏற்படுத்திய தாக்கத்தால், வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமானோர் வந்ததாக கூறப்படுகிறது.


இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தில் மாமன்னர் ராஜ ராஜசோழனாக நடித்திருந்த ஜெயம் ரவி, சதய விழா குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது : “ராஜ ராஜசோழனுக்கு சதய விழா. இவரது புகழையும், பெருமையும் போற்றி, அடுத்த தலைமுறைக்கு பகிர்ந்து பெருமை கொள்வோம். பொன்னியின் செல்வனாக “திரையில் உம்மை பிரதிபலிக்க" நான் என்ன தவம் செய்தேனோ” என பதிவிட்டுள்ளார்.இவரின் பதிவு வைரலாகி வருவதையும் காணலாம்.

Advertisement

Advertisement

Advertisement