• Sep 21 2024

கோட் படத்தின் நீளம் மொத்தம் எவ்வளவு நேரம் தெரியுமா?

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இறுதியாக விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் லியோ. இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். இந்த படம் விமர்சன ரீதியாக பெற்ற வரவேற்பை விட வசூல் ரீதியாக சாதனை படைத்திருந்தது.

லியோ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமானார் நடிகர் விஜய். அதன் படி தற்போது கோட் படமும் செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீசுக்கு தயாராக உள்ளது. இன்றைய தினம் இதன் ட்ரெய்லர் வெளியாகும் என கூறப்பட்டது.

நடிகர் விஜயுடன் கோட் படத்தில் பிரபுதேவா, பிரசாந்த், லைலா, மைக் மோகன், சினேகா உட்பட பலர் நடிப்பதால் இந்த படம் மீதான எதிர்பார்ப்பும் பெரிய அளவில் காணப்படுகின்றது.


சமீபத்தில் கோட் படத்திலிருந்து மூன்று பாடல்கள் வெளியாகி  ரசிகர்களின் கவனத்தைப் பெற்ற நிலையில், இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாக இருப்பதால் விஜய் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளார்கள்,

இந்த நிலையில், கோட் படத்தின் சென்சார் பணிகள் முடிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதோடு இந்த படத்தில் நீளம் 2. 45 மணி நேரம் இருக்கும் என கூறப்படுகின்றது. இதனால் கோட் திரைப்படம் ரசிகர்களுக்கு செம் ரீட்டாக  இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisement

Advertisement