• Apr 28 2024

அயோத்தி ஹீரோயினை நமக்கு முன்னாடியே தெரியுமா... அட இவங்களா?... திடீரென மீண்டும் ட்ரெண்டாகும் வீடியோ!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர், நடிகர் சசிகுமார் நடிப்பில், அ.மந்திரமூர்த்தி இயக்கத்தில் வெளியாகி சமீபத்தில் சர்ப்ரைஸ் ஹிட் அடித்த திரைப்படம் ‘அயோத்தி’.

கடந்த மார்ச் 3ஆம் தேதி வெளியாகி அனைத்து தரப்பினர் மத்தியிலும் லைக்ஸ் அள்ளிய அயோத்தி திரைப்படத்தின் மூலம் நடிகை ப்ரீத்தி அஸ்ரானி ஹீரோயினாக அறிமுகமாகி வரவேற்பைப் பெற்றார்.

இந்நிலையில், ப்ரீத்தி அஸ்ரானி தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்கெனவே பரிட்சயமானவர் என்பதைக் கண்டறிந்துள்ளதுடன் அவரது பழைய வீடியோவையும் இணையவாசிகள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

தெலுங்கு சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ப்ரீத்தி அஸ்ரானி ஃபிடா, யசோதா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்கெனவே அவர் பரிட்சயமானது சீரியல் உலகின் மூலம் தான்.2018 முதல் 2020ஆம் ஆண்டு வரை சன் டிவியில் ஒளிபரப்பான மின்னலே தொலைக்காட்சித் தொடரில் ஷாலினி எனும் கதாபாத்திரத்தில் நடித்த ப்ரீத்தி அஸ்ரானி அப்போதே ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்டார்.

மேலும் க்யூட்டாக இந்தி விடுகதை ஒன்றை கண் அடித்து முத்தம் கொடுத்தபடி ப்ரீத்தி சொல்லும் வீடியோ ஒன்று அவர் மின்னலே சீரியலில் நடித்தபோது வெளியாகி இணையத்தில் மிகப்பெரும் வைரலானது.

இந்நிலையில் தற்போது அயோத்தி படத்தில் நடித்திருப்பது 2 ஆண்டுகளுக்கு முன் வைரலான ப்ரீத்தி தான் எனக் கண்டறிந்து இணையவாசிகள் மீண்டும் இந்த வீடியோவைப் பகிர்ந்து வருகின்றனர். 


Advertisement

Advertisement

Advertisement