• May 20 2024

இதயத்தை திருடாதே நவீன் நடிக்கவிருக்கும் புதிய சீரியல்-கதாநாயகி யார் தெரியுமா-வெளியான ப்ரமோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சமீபகாலமாக ஒவ்வொரு தொலைக்காட்சியிலும் ரசிகர்களைக் கவரும் விதமாக பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் கலர்ஸ் தமிழ் டிவியில் பல சீரியல்கள் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கின்றன.

இதில் 2020ம் ஆண்டு தொடங்கப்பட்ட சீரியல் தான் இதயத்தை திருடாதே. இந்த சீரியலில் நவீன் மற்றும் ஹீமா பிந்து ஆகியோர் கதாநாயகன் மற்றும் கதாநாயகியாக நடித்து இருந்தனர்.

இந்நிலையில் சீரியல் நடிகர் நவீன் நடிக்கும் புதிய சீரியலின் ப்ரமோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

அந்த தொடரின் பெயர் “கண்டநாள் முதல்”.இந்த சீரியலில் நவீனுக்கு ஜோடியாக நீ தானே என் பொன் வசந்தம் சீரியலில் அனுவாக நடித்த தர்சனா அசோகன் நடிக்கவுள்ளார்.

இந்த சீரியல் ஜீன் 13 ஆம் திகதி திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 இற்கு ஒளிபரப்பாகவுள்ளது.

இதோ அந்த ப்ரமோ….

Advertisement

Advertisement