இந்திய பிரீமியர் லீக் (IPL) 2025 சீசன், மிகுந்த எதிர்பார்ப்புகளோடு தொடங்க இருக்கின்றது. அதில், மார்ச் 23ஆம் திகதி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவிருக்கும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (MI) மோதவுள்ளனர்.
இந்தப் இந்தப் போட்டியை மேலும் சிறப்பாக்கும் வகையில் பிரபல இசையமைப்பாளர் அனிருத் நடத்தும் மெகா மியூசிக் ஷோ அங்கு இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தமிழ் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தையும் வித்தியாசமான அனுபவத்தையும் உருவாக்கியுள்ளது.
பொதுவாகவே CSK மற்றும் MI ஆகிய இரு அணிகளும் IPL வரலாற்றில் பல தடவை கோப்பைக்காக மோதியுள்ளன. சமீபத்தில் வெளியான தகவல்களின் படி, மார்ச் 23ம் திகதி போட்டி தொடங்குவதற்கு முன்பு அனிருத் ரவிச்சந்தர் தலைமையில் ஒரு சிறப்பு இசை நிகழ்ச்சி நடைபெறவிருப்பதாக கூறியுள்ளனர். இது அனைத்து கிரிக்கெட் மற்றும் இசை ரசிகர்களுக்கு சந்தோசத்தை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!