• May 20 2024

பேரறிவாளன் தாயான அற்புதம்மாளின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க முடிவு செய்த இயக்குநர் வெற்றிமாறன்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கிய முன்னணி இயக்குநராக வலம் வருபவர் தான் வெற்றி மாறன். இவர் தனுஷை வைத்து இயக்கிய பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை ,அசுரன் போன்ற திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றிருக்கின்றன.

இதனைத் தொடர்ந்து தற்பொழுது நடிகர் சூரியை வைத்து விடுதலை என்னும் படத்தை இயக்கி வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பானது அதன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதோடு இப்படத்தில் விஜய்சேதுபதியும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து உள்ளார்.

மேலும் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 31 ஆண்டுகள் சிறை வாசத்திற்கு பிறகு இன்று பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார்.

அவரது அம்மா அற்புதம்மாளின் இத்தனை வருட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என பலரும் கூறி வருகின்றனர். இந்நிலையில் அற்புதம்மாளின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க விரும்புவதாக இயக்குநர் வெற்றிமாறன் முன்பு ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.

இதனால் இந்த யோசனையை வெற்றிமாறன் நடைமுறைப்படுத்துவாரா என ரசிகர்கள் ஆவலாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement