• May 10 2024

கோழிக்கு ஒரு நிஜாயம், மாட்டுக்கு ஒரு நிஜாயமா?-கடும் கோபத்தில் வெற்றிவேல் திரைப்பட நடிகை

stella / 1 year ago

Advertisement

Listen News!

2009 இல் பாக்யதேவா என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை நிகிலா விமல். 2016 இல் வெற்றிவேல் என்ற படத்தில் நடிகர் சசிகுமாருடன் நடித்து, தமிழ் திரையுலகில் பிரபலமானார்.

இதைத்தொடர்ந்து மீண்டும் சசிகுமாருடன் இணைந்து கிடாரி படத்திலும் , தம்பி படத்தில் கார்த்திக்கு ஜோடியாகவும் நடித்தார் இந்நிலையில் நடிகை நிகிலா, மாட்டிறைச்சி குறித்து பேசிய தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகின்றது.

அதாவது பாதுகாக்க வேண்டுமென்றால் அனைத்து விலங்குகளையும் பாதுகாக்க வேண்டும். வெட்டக்கூடாது என்றால் அனைத்து விலங்குகளையும் வெட்டக்கூடாது என்கின்ற நிகிலாவின் கருத்து அனைவரையும் யோசிக்க வைக்கின்றது. கோழி, ,மீனையெல்லாம் சாப்பிடும் போது மாட்டிறைச்சியை சாப்பிடக்கூடாதா கோழிக்கு ஒரு நிஜாயம், மாட்டுக்கு ஒரு நியாயமா?.

மாறவேண்டுமென்றால் அனைத்தையும் மாற்றி முழு சைவமாக வேண்டும், இல்லையென்றால் அனைத்தையும் சாப்பிடவேண்டும் என்று நிகிலா மிக கட்டாயமாக கூறியுள்ள விஷயம் சமூக வலைத்தளங்களில் பரவிவருகின்றது, மற்றும் அனைவரையும் யோசிக்க வைத்திருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement