தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் சங்கர் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தற்பொழுது வெளியான தகவலின் படி, சங்கருக்கு சொந்தமான ரூ.10.11 கோடி மதிப்பிலான 3 அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை ‘எந்திரன்’ திரைப்படத்தின் கதை உரிமை தொடர்பான விவகாரம் காரணமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
சங்கர் எந்திரன் படத்தின் கதை உரிமையை முறையாகக் கடைப்பிடிக்க வில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வந்தது. இந்த விவகாரம் சட்ட ரீதியாக தொடர்ந்தத நிலையில் தற்போது அமலாக்கத்துறையினர் சங்கரின் சொத்துக்களை முடக்கி, அவரது வருமான வழிகளை விசாரித்து வருகின்றனர்.
2010ஆம் ஆண்டு வெளியான ‘எந்திரன்’ திரைப்படம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியான திரைப்படங்களில் ஒன்றாகும். இதன் கதையை உரிமை மீறி பயன்படுத்தியதாக சிலர் குற்றம்சாட்டினர். இதற்கு இயக்குநர் சங்கர், இந்த விவகாரத்தில் எந்த விதமான சட்டப் பிழையும் செய்யவில்லை என்றும், சொத்து முடக்கப்பட்டதற்கான உண்மை காரணத்தை விரைவில் விளக்குவேன் என்றும் கூறியுள்ளார்.
இந்த விவகாரம் தமிழ் சினிமாவில் பெரும் சர்ச்சையாக மாறியுள்ளதுடன் சங்கர் தனது சட்ட ஆலோசகர்களுடன் கதைத்து விரைவில் விளக்கம் அளிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் ஒட்டுமொத்த நடிகர்கள் மற்றும் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!