தமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகர்களில் தனுஷும் ஒருவர் இவர் நடிப்பு மாத்திரமின்றி பவர்பாண்டி ,ராயன் திரைப்படங்களின் பின்னர் இயக்குநராக மிகவும் பிசியாக வலம் வந்துகொண்டிருக்கின்றார். இவரது இயக்கத்தில் பவிஷ் ,அனிகா போன்ற இளம் நடிகர்கள் நடித்து நாளை வெளியாகவுள்ளது. இப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த நிலையில் தனுஷின் மேனேஜர் பெயரில் நிறைய பெண்களிடம் மோசடி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நடிப்பதற்காக தனுஷ் ஒவ்வொரு அறிமுக நடிகர்களையும் தேடி செதுக்கியுள்ளார். தற்போது இந்த படத்தின் பகுதி இரண்டில் நடிப்பதற்கு ஆட்களை சேர்ப்பது போன்ற மோசடி கும்பல் ஒன்று கிட்டத்தட்ட 5 இற்கும் அதிகமான பெண்களை ஏமாத்தியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
ஒரு சில பெண்கள் முன்னெச்சரிக்கையுடன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதுடன் தனுஷின் மேனேஜர் இது தனது number இல்லை என கூறியுள்ளார். தொடர்ந்தும் இந்த மோசடி கும்பலினை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Listen News!