• Jan 19 2025

உன்ட அம்மா, தங்கச்ச பத்தி இப்படி அசிங்கமா பேசுவியா? பயில்வானை வெளித்துவாங்கிய பப்லு

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகர் பப்லு பிரித்விராஜ்.இவர் தனது முதல் மனைவி உடன் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், மலேசியாவை சேர்ந்த  24 வயது நிரம்பிய ஷீத்தல் என்பவருடன் உறவில் இருந்தார். 

தன்னை விட 27 வயது குறைவான பெண்ணுடன் பப்லு பிரித்விராஜ் உறவில் இருந்ததால் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தது.சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பப்லு பிரித்விராஜ், நான் ஷீத்தலை பிரிந்து விட்டேன் என்று எங்கேயாவது கூறினேனா? அல்லது ஷீத்தல் எங்கேயாவது கூறினாரா? நீங்களே நாங்கள் பிரிந்துவிட்டோம் என்று கூறுகிறீர்கள்.



என்னுடைய வாழ்க்கையில் நிறைய ஏமாற்றத்தை சந்தித்து இருக்கிறேன். இனி மேலும் திருந்தவில்லை என்றால் நான் முட்டாள் என்று அர்த்தம். இப்போது தான் எல்லாம் எனக்கு புரிகிறது என தாங்கள் பிரிந்ததை பட்டும் படாமல் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தனது இளம் காதலி ஷீத்தலை பிரிந்தது தொடர்பில், பயில்வான் ரங்கநாதன் அசிங்கமாக பேசியுள்ளதாக கூறி அவரை பேட்டியொன்றில் வைத்து விளாசியுள்ளார் பப்லு பிரித்விராஜ். அதன்படி அவர் கூறுகையில்,


'முதலில் நான் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பொது இடத்தில் வைத்து பேசிட்டன். அப்போ தெரியாம செஞ்ச தப்ப மீண்டும் செய்ய மாட்டன். இனி எந்த காரணத்திற்காகவும் என் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பொது இடத்தில் பேச மாட்டன்.

ஆனா, பயில்வான் ரங்கநாதன் என்ட வாழ்க்கைய பற்றி மோசமா பேசி இருக்கார். அவருக்கு வேற வேலை இல்லை. அவரால் பீச்சில் ஒரு ஒழுங்காக கூட நடக்க முடியாது. நீயும் ஒரு நடிகன் தானேஇ நாம் அனைவரும் ஒரே குடும்பம் தானே காசுக்காக இப்படி அசிங்கமா பேசுவியா... உன்னுடைய அம்மாவையோ, தங்கையோ, பெண்ணையோ இப்படி அசிங்கமாக பேசினால், உனக்கு எவ்வளவு வலிக்கும். அசிங்கமானவர்களால் அசிங்கமாத்தான் பேச முடியும்' என்று கடுமையாக தாக்கி பேசியுள்ளார் பப்லு .

 

Advertisement

Advertisement