தல அஜித் துபாயில் நடைபெற்ற 24 மணி நேர கார் ரேஸில் தனது குழுவுடன் கலந்துகொண்டார். அவரது குழுவில் Fabian, Detry, Camy ஆகியோர் இணைந்து இருந்தனர்.
இந்த கார் ரேஸ் 24 மணி நேரம் தொடர்ந்த நிலையில் அதில் அஜித் குமாரின் குழு Porsche 992 கார் மூலம் 3வது இடத்தை பிடித்துள்ளது.
இதன் மூலம் அஜித் மற்றும் அவரது குழுவினர் சிறப்பாக நிகழ்வை முடித்து வெற்றி பெற்றனர்.அஜித் கார் ரேஸின் முடிவை கொண்டாடும் விதமாக இந்திய கொடியை தனது கையில் ஏந்தி அஜித் அனைவரையும் சந்தித்தார். அவரது வெற்றியைக் கொண்டாடும் ரசிகர்கள் அங்கு திரண்டு இருந்தனர்.தனது ரசிகர்களுக்கு அஜித் நன்றி தெரிவித்தார்.
பயிற்சியின் போது விபத்தில் சிக்கியதை கூட பொருட்படுத்தாமல் விடாமுயற்சியுடன் ரேஸில் கலந்து முதல் மூன்று இடங்களை பிடித்து கொண்ட அஜித்தின் இந்த வெற்றியினை ரசிகர்கள் சினிமா பிரபலங்கள் என பலரும் பங்கேற்று வருவதுடன் இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்த அஜித் அவர்களை கொண்டாடி வருகின்றனர்.
We Won😭🔥#AjithKumar #AjithKumarRacing pic.twitter.com/gAnwftJFhj
Listen News!