• May 29 2023

திடீரென இயக்குநர் நெல்சனைச் சந்தித்த தனுஷ்- இது தான் காரணமா?-இது ரஜினிக்கு தெரியுமா?

stella / 2 weeks ago

Advertisement

Listen News!


சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகிறது. நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. ரஜினியுடன் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், ஜெயிலர் படத்தில் ரஜினியின் போர்ஷன் முடிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. தனது காட்சிகளில் நடித்து முடித்துவிட்ட ரஜினி, தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படப்பிடிப்பிற்காக மும்பை சென்றுவிட்டார். தனுஷை பிரிந்த பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

 முன்னதாக ஜெயிலர் படத்தின் ரிலீஸ் தேதியை மோஷன் போஸ்டருடன் வெளியிட்டது படக்குழு. இந்த வீடியோவில் ரஜினியின் சால்ட் அன்ட் பெப்பர் லுக் செம்ம மாஸ்ஸாக இருந்ததாக ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்திருந்தனர். அதேபோல், இந்த வீடியோவை நடிகர் தனுஷ் தனது டிவிட்டரில் ஷேர் செய்திருந்தார். இந்நிலையில், தனுஷும் நெல்சனும் திடீரென சந்தித்துக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


ஜெயிலர் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் தீவிரமாக நடந்துகொண்டிருக்கும் சூழலில், தனுஷ் - நெல்சன் சந்தித்தது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயிலர் வெளியாகும் முன்பே தனது அடுத்த படத்தை தொடங்கதான் தனுஷை சந்தித்துள்ளாராம் நெல்சன்.

 தனுஷ் தற்போது நடித்து வரும் கேப்டன் மில்லர் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தனுஷும் அடுத்த படத்தில் நெல்சனுடன் இணைய முடிவெடுத்துள்ளாராம். இதன்மூலம் தனுஷ் - நெல்சன் கூட்டணியில் ஒரு படம் உருவாகவுள்ளது உறுதியாகியுள்ளது. இந்தப் படமும் மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் எனவும், விரைவில் அதுகுறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 


Advertisement

Advertisement

Advertisement