• Jan 18 2025

மீண்டும் திரைக்கு வரும் தேவயானி... திடீரென ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த 90ஸ் கனவு கன்னி

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

கடந்த காலங்களில் சினிமாவில் கொடி கட்டி பறந்தவர் தான் நடிகை தேவயானி. அந்த காலத்திலேயே கோடியில் சம்பளம் வாங்கிய நடிகையும் இவரே ஆவார். 

இவர் ஆண்களின் பேவரெட் மட்டும் இன்றி பெண்களின் முன்னுதாரணமாகவும் விளங்கினார். இன்றளவிலும் தேவயானி என்ற பெயரை கேட்டாலே ஞாபகம் வரும் அளவிற்கு தனக்கென ஒரு அடையாளத்தை தமிழ் சினிமாவில் செதுக்கி வைத்திருப்பவர் ஆவார்.

தமிழ் சினிமாவுக்கு "தொட்டா சிணுங்கி" திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். இவ்வாறு இவர் பல திரைப்படங்கள் நடித்திருந்தாலும் சூரிய வம்சம் திரைப்படத்தின் காட்சிகளே இவரை இன்றளவிலும் மீம்ஸ் , ரீல்ஸ் என ட்ரெண்டிங்கில் வைத்துள்ளது. 


அதுபோல பார்த்திபன் மற்றும் தேவயானி இணைந்து நடித்து மாபெரும் வெற்றி அளித்த திரைப்படமே  "அழகி" ஆகும். இது தற்போது தமிழ் நாட்டில் உள்ள திரையரங்குகளில் ரீ ரிலீஸாக உள்ளது. இதனை விளம்பரப்படுத்தும் விதமாக தேவயானி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


அதில் அவர் " 2002 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அழகி அது தற்போது 22 வருடம் கழித்து ரீ ரிலீஸாக உள்ளது. இது பெரிய ஒரு ட்ரெண்ட்செட்டிங்  பிலிம் , எனக்கு கல்யாணம் ஆன பிறகு ரிலீஸ் ஆனா முதல் படம் இது. இதன் இயக்குனர் "தங்கர் பச்சன்" மிகவும் சிறந்த இயக்குனர். பார்த்திபன் நல்ல நடிகர் , என்னோட சினிமா பயணத்துல "அழகி" முக்கியமான திரைப்படம் " என அவர் கூறிய காணொளி வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement