• Jan 19 2025

டிரைலரை விட செம்ம கிளாமர்.. லோகேஷ் மற்றும் ஸ்ருதிஹாசனின் ‘இனிமேல்’ ஆல்பம்..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் உருவான ‘இனிமேல்’ என்ற ஆல்பம் சற்றுமுன் வெளியாகி உள்ள நிலையில் இந்த ஆல்பத்தில் டிரைலரை பார்த்ததைவிட செம கிளாமராக இருந்தாலும் ஒரு நல்ல மெசேஜ் கமல்ஹாசன் மூலம் சொல்லப்பட்டிருப்பதை பார்த்து பார்வையாளர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் ஸ்ருதிஹாசன் பாடி உருவாக்கி இருக்கும் ‘இனிமேல்’ என்ற ஆல்பத்தில் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடித்திருந்தனர் என்பது கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான ட்ரெய்லரிலிருந்து தெரியவந்தது.

இந்த நிலையில் இந்த பாடல் சற்றுமுன் இணையத்தில் வெளியாகி உள்ள நிலையில் இந்த பாடலில் உள்ள கவித்துவமான காட்சிகள், காதல், திருமணம் மற்றும் தம்பதிகளுக்குள் இடையே உள்ள பிணக்கம், பிறகு மீண்டும் ஒன்று சேருதல் ஆகியவை மிக அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

ட்ரைலரில் பார்த்த கிளாமர் காட்சிகள் முழு பாடலில் பார்க்கும் போது விரசமாக தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கமல்ஹாசனின் ஆழமான எழுத்தில் லோகேஷ் கனகராஜ் ஸ்ருதிஹாசன் சூப்பரான நடிப்பில் இந்த பாடல் உருவாகி உள்ளது. இந்த பாடலில் உள்ள நடிப்பை பார்க்கும் போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தை விட்டுவிட்டு முழு அளவில் நடிப்பிற்கே வந்துவிடலாம் என்று கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது.



Advertisement

Advertisement