• Jul 15 2025

ரவி மோகன் மீது வழக்கு பதிவு!பதிலளிக்க நீதிமன்ற உத்தரவு..! ஜூலை 23க்கு விசாரணை ஒத்திவைப்பு!

Roshika / 5 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக  வலம்  வருபவர்  ரவி மோகன் இவர்  சில மாதங்களுக்கு முன்பு தான் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து  இருந்தார். இந்த நிலையில் ரவிமோகன் மீது நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.  அதில் நடிகர் ரவி மோகனுக்கு  எதிராக Bobby Touch Gold Universal Private Limited என்ற தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த வழக்கில், அவருக்கு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்காக ரூ.15 கோடி ஊதியமாக ஒப்பந்தம் செய்யப்பட்டு, ரூ.6 கோடி முன்பணம் ரவி மோகனுக்கு வழங்கப்பட்டது. ஆனால், அவர் அந்த படத்தில் நடிக்காமல், சொந்தமாக புதிய தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, 'புரோகோட்' என்ற படத்தை தயாரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், முன்பணம் திருப்பித் தர வேண்டும் என்றும், ‘புரோகோட்’ படத்தின் தயாரிப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், மற்ற தயாரிப்புகளிலும் அவர் நடிக்கத் தடை விதிக்க வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைத்தார். மேலும், ரூ.6 கோடி தொகைக்கு உத்தரவாதமும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்த நடிகர் ரவி மோகன் தரப்பில், “முன்பணம் பெற்றது உண்மைதான், ஆனால் கால்சீட் கொடுத்தும் படப்பணி தொடங்காததால், ரூ.10 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும்” என வாதிடப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், நடிகர் ரவி மோகன் ஜூலை 23ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .

Advertisement

Advertisement